தமிழ்லீடர்

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. கட்சித் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின் அவரது இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், மஹிந்த ராஜபக்ஷ தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு இன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முடியாது எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், ...

Read More »

குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதாளக்குழு உறுப்பினர் 8 பேர் கைது!

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல பாதாளக்குழு உறுப்பினரான தெமட்டகொட ருவன் உள்ளிட்ட 8 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் பாகிஸ்தான் தம்பதியினரும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், பணம் எண்ணுவதற்கு பயன்படுத்தப்படும் 2 கருவிகள், 4 கிராம் ஹெரோயின் மற்றும் 3 சொகுசு வாகனங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தெமட்டகொட பகுதியில் வீடு சுற்றிவளைக்கப்பட்டபோது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தெமட்டகொட ருவன் என்பவர் பிரபல பாதாளக்குழுத் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரர் ...

Read More »

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு!!!

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.  மேற்படி பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு முன்பாக கொட்டப்பட்டிருந்த கிரவல் மண்ணில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அப்பகுதியில் நின்றிருந்தவர்கள் அவதானித்ததுடன் குறித்த சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் மோட்டார் குண்டினை அவதானித்துள்ளதுடன் விஷேட அதிரடிப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்ற அனுமதியின் ...

Read More »

தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட ரயில்!!!

சிறிலங்காவின் களுத்துறைப் பகுதியில் தொடருந்து ஒன்று தண்டவாளத்தைவிட்டு பாய்ந்து தடம்புரண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி இன்று காலை நடந்த இந்தச் சம்பவத்தால் தென்னிலங்கைக்கான கரையோர தொடருந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. குறித்த தொடருந்து காலியிலிருந்து மருதானை நோக்கி வந்துகொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் வேகமாக திரும்பியதாகவும் இதனால் தண்டவாளைத்தைவிட்டு குறித்த தொடருந்து தடம் புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதன்போது குறித்த தொடருந்திலிருந்த பயணிகள் பாரிய விபத்து நேரப்போகின்றதோ எனும் அச்சத்தில் அலறியடித்ததாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.எவ்வாறாயினும் தொடருந்தில் பயணித்த எவருக்கும் ...

Read More »

ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது. அரசியலமைப்பு விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த நிலையில், இந்தச் சந்திப்பு இன்றிரவு 8.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இனப்பிரச்சினை தீர்வு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட இருப்பதாகவும், இதில், ஏனைய சிறுபான்மை தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.    ...

Read More »

ஆசிரியர்கள் நடத்தி வரும் ஆர்பாட்டத்தில் நீர்த்தாரைப் பிரயோகம்!

பத்தரமுல்ல – இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சுக்கு முன்னால், ஆசிரியர்கள், அதிபர்களால், எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 22 வருடங்களாகத் தாம் எதிர்நோக்கிவரும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குதல், 30 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பத்தரமுல்ல – பெலவத்த பிரதேசத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.          ...

Read More »

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறுப்பினர் கைது!

சிறுமியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பில், தென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஸ்புகுமார காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாகாண சபை உறுப்பினர் இன்று காலை சட்டத்தரணி ஊடாக அக்மீமன காவல்துறையில் சரணடைந்த பின்னர் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி 16 வயதான சிறுமியொருவர் பாலியல் தொல்லை செய்ததாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரை கைது செய்துள்ளதாக அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.          ...

Read More »

பாதுகாப்புக்காக யாழ் நீதிமன்றில் தஞ்சமடைந்த வயோதிபர்!!!

இணுவில் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று தஞ்சமடைந்தார். மேற்படி அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான், தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார். மேற்படி இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தனக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னால் நடமாட முடியாது உள்ளதாகவும் தெரிவித்து யாழ்ப்பாணம் மூத்த ...

Read More »

யாழ் பல்கலைகழக மாணவர்கள் கொல்லப்பட்டதன் சாட்சி!!!

3 தடைவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை காலையில்தான் அறிந்துகொண்டேன்” என இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாக உள்ள வீட்டில் வசிப்பவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ...

Read More »

தன்னிலை இழந்து தடுமாறும் தலைவன் இருந்த கிளிநொச்சி!

கிளிநொச்சி என்றால் கடந்த பத்தாண்டுக்கு முன் நினைவுக்கு வருவது அழகான தமிழ்பெயர்களுடன் கூடிய வாணிபங்கள்.தெருக்களில் காலைமாலையும் பல்வேறு சீருடைகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் பல்வேறு கட்டமைப்புக்களின் பணியாற்றும் பணியாளர்கள்.மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் திட்டமிட்டு நடத்தப்படும் தெருவெளி அரங்குகள் புத்தகவெளியீடுகள் போர்எழுச்சிக்கூட்டங்கள் மகளிர் சந்திப்புக்கள் முத்தமிழ் கலை அரங்குகள் சமகால அரசியல் அரங்குகள்.மாவீரர்களின் பேரோடு இலங்கும் தெருக்கள் குறுக்குகள்.தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் மையப்பணிமனைகள் ஊடக நிறுவனங்கள் நீதிபரிபாலன கட்டமைப்புக்கள் பொருண்மிய கட்டமைப்புக்கள் இப்படி ஒரு தமிழீழ அரசாங்கத்துக்குரிய ஒரு அடையாளத்தை கிளிநொச்சி இந்த உலகுக்கு பறைசாற்றியிருந்தது.அதற்கு மக்களும் ...

Read More »