தமிழ்லீடர்

ஜனாதிபதியைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள்!

புத்தளம் – அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர், இன்று புத்தளத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதேவேளை, இன்றைய தினம், ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்றுள்ள நிலையில், அந்த ஆணையையும் மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள், தமது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸாருடன், நீர் பவுசர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ...

Read More »

இலங்கையில் வெற்றியளித்த செயற்கை மழை பொழிவு!!!!

இலங்கையில் மவுஸ்ஸாகலை நீர்தேக்கத்தில் செயற்கை மழை பொழிவதற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியளித்துள்ளது. மேற்படி மலையகத்தின் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் காலை 11 மணியளவில் இரசாயணப் பதார்த்தம் இலங்கை விமானப்படையின் Y-12 ரக விமானம் மூலம் தூவப்பட்டது. மேலும் இதையடுத்து பகல் 01.00 மணி முதல் 01.45 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செயற்கை மழை பொழிவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் தினங்களிலும் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகலை நீர்த்தேகக்க பகுதிகளில் வான்பரப்பில் செயற்கை மழையை பொழிய வைக்க ...

Read More »

டிப்பர் ரக வாகனம் மோதியதில் மகன் பலி! தந்தை படுகாயம்!!!

திருகோணமலை -ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இன்று டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேற்படி இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கல்பிட்டி – கந்தகுலிய, குறிஞ்சாம்பிடிய பகுதியைச் சேர்ந்த தனுஷ்க மதுரங்க வயது 20 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். மற்றும் அவரது தந்தை அன்டனி எலிஸ் ரொஷான் வயது 39 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே இந்த விபத்து தொடர்பில் தெரியவருகையில்,தந்தையும், மகனும் கல்பிட்டி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மீன் எடுப்பதற்காக பட்டா வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின் புறமாக ...

Read More »

காருக்குள் இருந்து தீப்பற்றி எரிந்த நபர்!

மொனராகலை பொலிஸ் பிரிவில் உள்ள வீதி ஒன்றில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்தமையினால் நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப் பகுதிக்குள் வைத்து வாகனம் தீப்பற்றி எரிந்துள்ள நிலையில், அந்த வாகனத்தில் பயணித்த நபரும் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதான டிப்போ வீதி பிரதேசத்தை சேர்ந்த நபர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று மாலை இந்த நபர் மனைவியுடன் ஏற்பட்ட  மோதலினால் கெப் வாகனம் ஒன்றில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read More »

சூரியசக்தி மூலமான மின்னுற்பத்திக்கு  அரசாங்கம் மறுப்பு!

சூரியச சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை அனுமதிப்பதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருவதாக சூரிய சக்தி தொழில் துறை சங்கத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். சூரியசக்தி மூலமான மின் பிறப்பாக்கியை அமைப்பதற்கு 3 வருடங்களாக 300 மூதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 650 விண்ணப்பங்களை இலங்கை மின்சார சபை பரீசீலனை செய்யாது இருப்பதுடன், அனுமதி வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது. ஆகவே அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.                ...

Read More »

ரயிலின் முன் பாய்ந்த இளைஞன்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் நடைபெற்றுள்ள நிலையில், தற்கொலை செய்துகொண்ட இளைஞன் 18 வயது மதிக்கத்தக்கவர் எனவும்,  குறித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தெரியவரவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.     

Read More »

இராணுவத்தினர் வசமுள்ள  சில காணிகள் விடுவிக்க நடவடிக்கை!

இலங்கை இராணுவத்தின் பாவனையில் கிழக்கு பிரதேசத்தில் இருந்த காணிகள் இம் மாதம் (25) ஆம் திகதி விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது. குச்சவேலி, கல்முனை மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குரிய திரியாய், பெரியநிலாவெளி பிரதேசங்களிலுள்ள 5.05 ஏக்கர் காணிகள் 4 ஆவது கட்டமாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவைகளில் 3.5 ஏக்கர் காணி நிலப்பரப்புகள் தனியாருக்கு சொந்தமானதெனவும், இந்த காணிகள் அம்பாறை மாவட்ட செயலாளர், அனைத்து மதகுரு தலைவர்கள், ஆளுனர், மாவட்ட செயலாளர்கள், கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் கிராம ...

Read More »

புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் வசம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரிடம் உள்ளதாகவும், கொழும்பில் விடுதலைப் புலிகள் தமது தேவைக்காக பயன்படுத்திய காணிகள் தற்போது கோட்டாபய ராஜபக்சவிடம், என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கி தகவலின் போது, “எனது கணவர் உயிருடன் இருக்கின்றார் என்ற நம்பிக்கையில்தான் இன்னும் அலைந்து திரிகின்றேன். சரணடைந்தவர்களை யுத்தத்துக்குப் பின்னர் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிந்த பிறகு விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் 04ஆம் ...

Read More »

ஐ.நா.வின்புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையை வரவேற்கும் என்றால், அது அவர்களுக்கு சாதகமாக வந்துள்ளது. எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும். எங்கள் பிரதிநிதிகளை துணையாகக்கொண்டு இந்த பிரேரணையை அவர்கள் தாங்கள் நினைத்தவாறு முடித்துள்ளார்கள். எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும். எனினும் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இந்த புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை“ என தெரிவித்துள்ளார்.

Read More »

மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்

மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று  2.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் ...

Read More »