தமிழ்லீடர்

எவரையும் விலக்க முடியாது – கஜேந்திரகுமாருக்கு குட்டுவைத்த பேரவை

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து ஈ.பீ.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் அமைப்புக்களை வெளியேற்ற வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த கோரிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரித்துள்ளது. இதனால், குறித்த இரு கட்சிகளும் பேரவையில் தொடர்ந்தும் இருக்கலாமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் 10-12-2018 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேரவையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சீ.வீ. விக்கினேஸ்வரன் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டார். இது ...

Read More »

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் பற்றி கூறமுடியும்.மஹிந்த தேசப்பிரிய

பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவினை பிறப்பித்துள்ள நிலையில் தற்போது தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மேலும் ஜனவரி மாத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு ...

Read More »

மக்களின் ஆதரவை எதிர்பார்க்கும் மஹிந்த.

கண்டி, தலதா மாளிகையில் இன்று இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது,மக்களுக்கு இந்த மூன்று வருட அரசாங்கம் மீது வெறுப்பு வந்துவிட்டது. இதிலிருந்து மக்களை மீட்க வேண்டும் என்றே நாம் செயற்பட்டோம் என குறிப்பிட்டார்.  இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், அதிகார பிரச்சினையால் இந்தப் பிரச்சினை வரவில்லை. ஆனால், இந்த பிரச்சினையில் நீதிமன்றம் மத்தியஸ்தம் வகித்தமையாலேயே சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. இது பாரதூரமான நிலைமையாகும். எமது செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பல ...

Read More »

தனி ஒருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியம் இல்லை.

பொலன்னறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமையவே எதிர்கால நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இன்று அனைவருமே நீதிமன்றத்தின் தீர்ப்பினையே எதிர்பார்த்த வண்ணமாக இருக்கின்றனர். எனினும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளபோதிலும் அமைச்சுகள் செயற்பட முடியாதுள்ளன. நாட்டின் நிர்வாகப் பொறுப்பு தனி ஒருவராக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது தொடர்பில் நான் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை. எனெனில் ஜனநாயகத்தை சக்திமிக்கதாக மாற்றும் நாட்டில், தனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை. பிரதமர் மற்றும் அமைச்சர்களின் நிர்வாகம் இன்றி ...

Read More »

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு புதிய புகையிரத வண்டி தருமாறு கோரிக்கை.

  மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகள் அனைத்தும் பழமைவாய்ந்த புகையிரத வண்டிகளாகவே உள்ளன.  எனவே இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள புகையிரத வண்டிகளில் ஒன்றை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டம் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பிரயாணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர். மேற்படி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகள் அனைத்தும் ஏனைய புகையிரத நிலையங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புகையிரத வண்டிகளை விடவும் மிகவும் பழமைவாய்ந்த புகையிரத வண்டிகளாக காணப்படுகின்றது. இதனால் பல காலமாக சுகமான பிரயாணங்களை ...

Read More »

இராணுவத்தினரின் வசமிருந்த 10ஏக்கர் காணி இன்று விடுவிப்பு.

ஜனாதிபதியின் உத்தரவிற்க்கமைய கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவினால் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது அதன் ஒரு கட்டமாக குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளன. டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெரும்பான்மையான காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு- கிழக்கு அபிவிருத்தி செயலணியில் உறுதியளித்ததுடன், அது குறித்து அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டிருந்தார். அதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் ...

Read More »

தீடிர் ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பில்லை!

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதா?இல்லையா?என்பது குறித்து நானே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை எனவும் அவ்வாறான எண்ணம்  எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்ப நான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இரண்டாவது தடைவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா?என்ற கேள்விக்கு தற்போதைக்கு இது குறித்து பதிலை தெரிவிக்க முடியாது இதற்கான காலம் உள்ளது.இது குறித்து தற்போது தீர்மானிக்கவேண்டிய தேவையில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ...

Read More »

எரிபொருளின் விலை குறைந்தும் பஸ் கட்டணம் குறையவில்லை!

இலங்கை அரசியல் நெருக்கடியால் மக்கள் மற்றும் பல்வேறு துறைகளும் பல சிக்கலான பிரச்சனைகளையும் சவால்களையும் எதிர் நோக்குகின்ற நிலையில் தற்போது போக்குவரத்து தொடர்பான விடயங்களில் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன. இது வரையில் அரசாங்கத்தால் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனெனில் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டாலும் பஸ்ஸின் ஏனைய உதிரிபாகங்களின் விலை அதிகரித்துள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் எரிபொருட்கள் விலை குறைக்கப்பட்டதால் 100க்கு ...

Read More »

கையில் ஆயுதத்துடன் மீண்டும் மஹிந்த!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்த காலக் கட்டத்தில் கிரக பலன்கள், மந்திர தந்திரங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்.அதனாலே பல விடயங்களை செய்தார். அந்த நம்பிக்கையின் பிரதிபலனாக பல்வேறு விதமான ஆபரணங்களை அணிந்திருப்பார். அத்தோடு இந்திரப் பதவியை வகித்த இந்திரனின் கைளில் உள்ள வஜ்ஜிராயுதத்தை ஒத்த சிறிய ஆயுதமொன்றை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலிருந்து தனது கையில் வைத்திருந்தார். அந்த ஆயுதம் கேளராவிலுள்ள மந்திரவாதிகளால் விசேடமாக தயாரிக்கப்பட்டு மஹிந்தவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த காலப்பகுதியில் வைரலாக பேசப்பட்டது. பின் ஜனாதிபதி பதவி பறிபோன பின்னர் ...

Read More »

இறுதி தீர்ப்பு வெளியிடப்படும் வரை இடைக்கால தடை உத்தரவு அமுல்படுத்தப்படும்

ஐக்கிய தேசியகட்சி ,மக்கள் விடுதலை முன்னணி,ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய 13அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கல் உயர்நீதிமன்றினால் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. மேற்படி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் மீதான விசாரணை நேற்று நிறைவடைந்தது. எனினும்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை இடைக்காலத்தடை உத்தரவு அமுலில் இருக்கும் என உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட நீதியரசர் குழாம் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தது.

Read More »