தமிழ்லீடர்

சத்திர சிகிச்சையில் வெற்றி கண்ட யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள்!!!

கிளிநொச்சி முரசுமோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவரின் சிதைவடைந்த நிலையிலிருந்த கை யாழ் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர்களால் பிளாஸ்ரிக் சத்திரிசிகிச்சை மூலம் சீர் செய்யப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,தும்பு அடிக்கும் இயந்திரத்துக்குள் தவறி கைகள் இரண்டும் சிதைவடைந்த நிலையில் சேர்க்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவரின் இடது கை பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மூலம் சீர் செய்யப்பட்டுள்ளது.  எனினும் வலது கை அறுவைச் சிகிச்சைக்குட்படுத்த முடியாத நிலையில் அகற்றப்பட்டது.மேற்படி 40 வயது மதிக்கத்தக்க 5 பிள்ளைகளின் தாயார், தும்பு அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் ...

Read More »

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் மர்ம நபர்களால் மணற்கொள்ளை!!!

யாழ்ப்பாணத்தின் மணல் வளம் செறிந்த பூமி எனப்படும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தொடர்ந்தும் மர்ம நபர்களால் மணற்கொள்ளை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி ஆழியவளை கிராமத்தில் உள்ள உலாந்தாக்காடு எனும் வனாந்தரப் பிரதேசமொன்றில் தற்பொழுது மர்ம நபர் ஒருவர் களவாக மண் அகழ்வில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த கிராமத்திற்கு இந்த மணற்கொள்ளை எவ்வாறு வந்தது என்பதை அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எமக்கு தகவல் தருகையில், ”ஆழியவளை கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஒன்றை கள்ள உறுதி ...

Read More »

போர் குற்றத்தை மறைக்கும் மைத்திரி! அவலப்படும் தமிழ் மக்கள்!

இறுதி யுத்தத்தின்போது இராணுவ வீரர்கள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. ஆகையால் அவர்களை தண்டிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  மேற்படி இராணுவத்தினர் குருதி சிந்தி நாட்டை மீட்டெடுத்தவர்கள். ஆகையால் அவர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதே எனது நிலைப்பாடு எனவும் தெரிவித்திருந்தார். மேலும் வடக்குக்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போரின்போது இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் எனவும், இந்தச் சம்பவங்களை மறப்போம் மன்னிப்போம் எனவும் கூறியிருந்தார். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது, “பிரதமர் ...

Read More »

புதிய கூட்டணிக்கு அத்திவாரமிடும் மஹிந்த மற்றும் மைத்திரி!!!

புதிய கூட்டணி ஆரம்பிப்பது தொடர்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இதேவேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி என்பன தனிநபரில் தங்கியிருக்காது, ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து போட்டியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ...

Read More »

முதலில் தூக்கிலிடப்படும் குற்றவாளி யார்??

முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் மற்றும் குற்றவாளி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளது. எனவே விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் அறிவிக்கப்படும் எனவும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி பெற்றுக் கொண்டுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

Read More »

கொழும்பு கோட்டையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கொழும்பு – கோட்டை, லோட்டஸ் வீதியில் இன்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு – கோட்டை லோட்டஸ் வீதியில் ஏற்பாடு செய்துள்ளார்கள். அதேவேளை, லோட்டஸ் சுற்றுவட்டத்தை அண்மித்த வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைகளை வைத்தும் ...

Read More »

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்படவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது!!!

நாடாளுமன்றில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். இதற்கமைய மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தொகுதி தீவிர சோதனைக்குட்படுத்தப்படும்.இதன்போது அமைச்சர்கள் ,எம்.பி.க்களின் அறைகள், அலுமாரிகள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதால் இதற்குரிய ஒத்துழைப்புக்களை அவர்கள் வழங்க வேண்டும் எனவும் அதேவேளை,வரவு,செலவுத்திடட்டும் சமர்ப்பிக்கப்படும் மார்ச் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு பொதுமக்கள் வருகை தர அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ...

Read More »

சர்வதேச மாநாடு இலங்கையின் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துமா???

உலகளாவிய கூட்டுறவு இளைஞர் சம்மேளன மாநாடு” எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாட்கள் இடம்பெறவிருக்கின்றது.மேற்படி வரக்காப்பொலையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் , சிறப்பதிதியாக வர்த்தகம், கைத்தொழில், நீண்ட கால இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில்110 இற்கு மேற்பட்ட நாடுகள் பங்கேற்பதோடு இலங்கையை சேர்ந்த சுமார் 100 பேர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மூன்று நாள் மாநாடு ...

Read More »

இலங்கையில் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு!

இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்மதிக்கு இராவணாவன் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், இது அளவில் சிறிய செய்மதி என ஆர்த்தர்சிகிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளதாக, பொறியியலாளர் தரிந்துதயாரட்ன, ஆய்வுப் பொறியியலாளர் துலானி சாமிக்கா ஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளார்கள், என குறிப்பிடப்பட்டுள்ளது.                       

Read More »

பெண்களுக்கான பாதுகாப்பு பயணம்!!!

ரயில் பயணங்களின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக, போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யத் தீர்மானித்துள்ளார். இதன் முதற் கட்ட நடவடிக்கை, மகளிர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் மார்ச் மாதம் எட்டாம் திகதி முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கென தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யும் வேலைத் திட்டம், முதற்கட்டமாக பாரிய நகரங்களை நோக்கிச் செல்லும் ஐந்து ரயில்களில் மேற்கொள்ளப்படும்.  குறிப்பாக, வேலை நேரங்களை மையப்படுத்தி, இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.வெயாங்கொடை ரயில் நிலையத்தை மேற்பார்வை ...

Read More »