தமிழ்லீடர்

பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மட்டக்களப்பு திடீர் விஜயம்.

கொழும்பில் இருந்து அவசரமாக மட்டக்களப்பிற்கு வருகை தந்த பொலீஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர  சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு சென்று பாதுகாப்பு நிலைமைகளை  ஆராய்ந்தார். இச்சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும்  பொலிசார், விஷேட அதிரடிப்படை,  புலனாய்வு அதிகாரிகள் துரித விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் கூறினார். அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு சென்ற பொலிஸ்மாதிபர் பூஜித ஜயசுந்தர கொல்லப்பட்ட இரு பொலிசாரின் சடலங்களையும் பார்வையிட்டதுடன் மாவட்ட பொலிஸ் அதிகாரிகளையும் அழைத்து முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். நேற்றய தினம் வெள்ளிக்கிழமை ...

Read More »

கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டதுடன், கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராம சக்தி மக்கள் சங்கங்கள் எவ்வாறு செயற்பட்டு வருகின்ற, செயற்பாட்டு முன்னேற்றம், எதிர்காலத்திட்டங்கள் தொடர்பிலும் அரசாங்க அதிபரால் ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி,  உதவி பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின்  பிரதி மற்றும் ...

Read More »

துப்பாக்கி சூட்டிற்கு இரு பொலிஸார் பலி.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும்  கடமையில் ஈடுபட்டிருந்த வேளை,  அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து ...

Read More »

பேருந்து விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த  சொகுசு பேருந்து நாத்தாண்டியா, ஹமில்டன் கால்வாயில் விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் மூவர் பெண்களாவர் மேலும் 20 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

840 இலட்சம் ரூபாவை மகிந்த ஹெலிகொப்டருக்காக செலவிட்டுள்ளார்.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், நாட்டினுள் பயணங்களை மேற்கொள்வதற்காக ஹெலிகொப்டரை பயன்படுத்தியுள்ளதோடு இதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக  ரவி கருணாநாயக்க எம்.பி. சபையில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்க கோரிய பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க இதனைப்பற்றி கூறினார்.  மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒரு மாதகாலம் முடிவடையும் நிலையில், உள்நாட்டில் ஹெலிகொப்டரில் பயணிப்பதற்காக 840 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

Read More »

ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி!

ஐக்கிய தேசிய  முன்னணி ஆட்சி அமைப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி பகிரங்கமாக ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.   நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவராக மஹிந்த ராஜபக்ச இல்லையென்பதை சுட்டிக்காட்டி, ஒக்ரோபர் 26ம் திகதிக்கு முன்னைய நிலவரத்தை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனையை தீர்க்க வழியென்றும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,ஒப்ரோபர் 26ம் திகதிக்கு முந்தையை நிலமையை ஏற்படுத்தும்படியும், ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமது ஆதரவு உள்ளதென்பதையும் குறிப்பிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பதின்னான்கு உறுப்பினர்களும் கையொப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.   ...

Read More »

அம்பாறையில் மாணவர்களுக்கிடையில் மோதல்.

அம்பாறை – உஹன பிரதேச பாடசாலை ஒன்றின் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 28 மாணவர்கள் விசாரிக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர், நிபந்தனையின் அடிப்படையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென, உஹன பொலிஸார் தெரிவித்தனர். காதல் விவகாரம் சம்பந்தமாகவே மாணவக் குழுக்களுக்கிடையில் இந்த முறுகல் நிலை ஏற்பட்டதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. க.பொ.த சாதாரண தர மாணவர்களே, பாடசாலையில் ஆண்டிறுதிப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பேரில், பாடசாலைக்கு விரைந்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களைப் பொலிஸ் ...

Read More »

விக்கியின் மாவீரர் தின அறிக்கை எதிரொலி – நீக்கப்பட்டது பொலிஸ் பாதுகாப்பு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு முன்னறிவித்தல் ஏதுமின்றி உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. மாவீரர் நாளையொட்டி விக்கினேஸ்வரன் அவர்களால்  வெளியிடப்பட்டிருந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் நிலையில் நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று 24 மணிநேரங்கள் கூட ஆகியிராத நிலைமையில் உடனடியாக அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும்  நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ...

Read More »

க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில் இலங்கை வானொலியில் நேரலை இன்று.

எதிர்வரும் மார்கழி மாதம் 3ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும்  சா.தர பரீட்சைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நேரடி வானொலி ஒலிபரப்பு நிகழ்வு இன்று  28ஆம் திகதி புதன்கிழமை  பி.ப 3மணி தொடக்கம் பி.ப. 4.30 மணிவரை இலங்கை வானொலியில் இடம்பெறவுள்ளது. சந்தேகமுள்ளவர்கள் தொலைபேசி வாயிலாக வானொலியுடன் தொடர்பு கொண்டு சந்தேகங்கலை தெலிவு செய்து கொள்ளமுடியும், என்று  நடைபெறவிருக்கும் க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில் விளக்கமளித்த இலங்கைப் பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-இலங்கை பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள அந்நிகழ்ச்சியில் கூறப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ...

Read More »

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக துறைநீலாவணையினைச் சேர்ந்த சரவணமுத்து நவநீதன்.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளராக துறைநீலாவணையினைச் சேர்ந்த இலங்கை நிருவாகசேவை அதிகாரி சரவணமுத்து நவநீதன் பொதுச்செவை ஆணைக்குழுவினால் இவருக்கான மீள்நியமனத்தை வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக பதவியில் இருந்த சரவணமுத்து நவநீதன் சிலகாலம் கனடாவில் புலம்பெயர்ந்து 12வருடகாலம் வாழ்ந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துறைநீலாவணையைப் பிறப்பிடமாகக்கொண்ட சரவணமுத்து நவநீதன்  கல்முனை உவெஸ்லிக்கல்லூரியிலும்,கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றவராவர். தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக இவர் கல்வியமைச்சின் உதவிச்செயலாளராக நியமிக்கப்பட்டள்ளார். இவர் துறைநீலாவணையினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபார்  அமரர் எஸ்.சரவணமுத்து அவர்களது புதல்வர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Read More »