தமிழ்லீடர்

பழைய விலைக்கு கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 26ம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பேரூந்து பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார். மேற்படி பழைய விலைக்கே பேரூந்து பயணக்கட்டணங்களை அறவிடும் நடத்துனர்கள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. பழைய விலைக்கு பேரூந்து கட்டணங்களை அறவிடும் பேரூந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு ...

Read More »

ஹெலியில் பயணித்தார் பிரதமர்.

வடக்கில் ஹொலியில் பயணித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஏற்பட்டுள்ள வௌ்ள அனர்த்த நிலைமைகளை அவதானிப்பதற்காக சென்றுள்ளார். அவருடன்  அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, தயா கமகே ஆகியோரும் அனர்த்தத்தைப் பார்வையிடச் சென்றுள்ளார்கள். வடக்குக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் அஸ்கிரிய மல்வத்து மாநாயக்கர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீ தலதாமாளிகைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடதக்கதாகும். ...

Read More »

மட்டக்களப்பில் 8.5 ஏக்கர் காணி விடுவிப்பு.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் 8.5 ஏக்கர் காணிகள் இராணுத்தால் தேசிய நல்லிணக்க முறையில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் துரித வழிகாட்டலில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த பொதுமக்களின் காணிகள் நேற்று (27) பிற்பகல் 4.00 மணியளவில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தளபதியால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களிடம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட ...

Read More »

வெள்ளப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சிட்னித் தமிழர்கள் உதவி!

கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 97 குடும்பங்களைச் சேர்ந்த பாலுட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பவதிகளுக்கு அத்தியவாசியமாகத் தேவைப்படுகின்ற பதின்மூன்று பொருட்கள் அடங்கிய பொதிகள் ஏற்றம் அறக்கட்டளையால் 27-12-2018 அன்று வழங்கப்பட்டது. சிட்னித் தமிழர்களின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இவ் உதவித் திட்டம் கிளிநொச்சி மாவட்ட ஏற்றம் பணிப்பாளர் மற்றும் முகாமையாளரின் மேற்பார்வையில் தொண்டர்களின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டது. இவ் உதவித் திட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஏற்றம் அறக்கட்டளையின் கிளிநொச்சி மாவட்டப் பணிப்பாளர் மற்றும் பாதிக்கப்பட்ட  பகுதிகளின் கிராம சேவையாளர்கள் கையளித்தனர்.

Read More »

வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் 55 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெள்ளப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் ஆரம்பகட்ட தகவல்களில் 65000 இற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பிடங்களை இழந்து அவதியுற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி தண்ணீரில் தத்தளித்துவருகின்றனர். மேலும் வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டம் வெள்ளம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தில் 55 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் வெள்ளப் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக ஊடகங்களை அச்சுறுத்தி வருகின்றார்!

ஊடகங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும், விரிவடைந்துள்ள ஊடகத்துறையிடம், எந்தவொரு விடயத்தையும் மறைக்க முடியாது என, நாடளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். மேற்படி ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தொடர்ச்சியாக ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சி, இதனை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்,பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது எனவும், எவ்வாறெனினும் ...

Read More »

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் எழுத்துமூல வாக்குறுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தியதாக ரெலோவின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். மேற்படி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. வடமராட்சி கிழக்கில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Read More »

அரசியல் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கத் தயார்!

இலங்கையில் அரசியல் மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கத் தயார் என்று பொது நலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி அரசியலமைப்பு, அரசியல் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நல்லிணக்கம் உட்பட்ட பல விடயங்களுக்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் மீண்டும் பிரதமராக நியமனம் பெற்றமைக்கு தனது வாழ்த்துக்களினையும் அவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூறியுள்ளார்.

Read More »

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அடுத்த வருடத்திற்கான, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைபெறவுள்ள தேர்தல் உள்ளிட்ட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் பிரதமரின் இல்லத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேற்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத்திலிருந்து தெரியவந்துள்ளது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்ததாகவும், சந்திப்பு முடிவடைந்தகையோடு சபாநாயகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், முரண்படாத வகையில், ஆட்சியை முன்னெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி ...

Read More »

துப்பாக்கிச் சூடு- பெண் கைது!

கிராண்ட்பாஸ்- ஹேனமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். குறித்த பெண் இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்து வந்துள்ளாரெனும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளுமென்டல் சங்காவை கைதுசெய்வதற்கும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 8 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் நால்வர் காயமடைந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »