Uncategorized

பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றி சேதம்

சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் சேதம் விளைவித்தமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது மஸ்கெலியா பிரதேச சபையால் வைக்கப்பட்ட பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றி சேதம் விளைவித்துள்ளனர் சிவனொளிபாதமலை என மும்மொழியில் எழுதப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்துகள் ஸ்ப்ரே செய்து மறைக்கப்பட்டுள்ளன இதனையடுத்து, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்துள்ளனர் அங்கு ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் ...

Read More »

ஜனாதிபதி யோசனை தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடாத்த தீர்மானம்!

அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தல்களை  மே மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நடாத்துவதற்கு ஜனாதிபதியின் யோசனை தொடர்பில், சபாநாயகரின் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடாத்தி தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 வாரங்களுக்குள் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடாத்தப்படவுள்ளதாகவும், எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் விருப்புவாக்கு முறைமையின் கீழ் நடாத்தப்பட வேண்டும் எனவும்,  ஜனாதிபதி இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை வழங்கியுள்ளார். அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரேநாளில் நடாத்துவதாயின், பதவிக்காலம் நிறைவடையாத மாகாண சபைகளைக் கலைப்பதற்கும், மாகாண ...

Read More »

10,000 வீட்டுத்திட்டம்; முதலில் 4,750 வீடுகள் நிர்மாணிக்க தீர்மானம்.

வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட 10 ஆயிரம் வீட்மைப்புத் திட்டத்தில், 4,750 வீடுகள் முதல் கட்டமாக, நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கவுள்ளதாக, தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து, அவர் நேற்று (15) ஊடகங்களுக்கு வழங்கிய தகவலிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலில், வீடுகள் 550 சதுரஅடி பரப்பளவில் அமையவிருப்பதாகவும், இவற்றுக்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வழங்கப்படவிருப்பதாகவும், தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1,500 வீடுகளும், கிளிநொச்சியில் ...

Read More »

எனது முழு ஒத்துழைப்பும் தங்களுக்கே!

கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்  அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுனராக செயற்படுவதற்கு தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக, தெரிவித்த அவர் கிழக்கு மக்களின் பிரச்சனைகளையும், தீர்த்துவைக்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களை தாங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு எவ்விதமான அநியாயம்ந் , கடந்த காலங்களில் நியமனங்கள்,பாடசாலை போன்ற விடயத்தில் அநியாயங்கள் மாகாண நிருவாகத்தில் நடைபெற்றிருக்கின்றது. தமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ...

Read More »

உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு! சாந்தபுரத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி.

கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் கனகாம்பிகைக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகிய இந் நிகழ்வை கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ப.குமாரசிங்கம் தலைமைதாங்கினார். நிகழ்வின் முதலில் பொதுச்சுடரினை மாவீரன் சாந்தன் அவர்களின் தாயார் மீனா அம்மா ஏற்றி வைக்க பெற்றோர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்த சுடர்களை ஏற்றி அஞ்சலித்தனர். பின்னர் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் உறவுகளினால் கண்ணீர் மல்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. சிறப்புரைகளை மேனாள் வடமாகாண ...

Read More »

வியாழேந்திரனை கட்சியில் இருந்து நீக்குமா புளொட்?

ஜனாதிபதியினால் கிழக்கு பிராந்திய அபிவிருத்தியினுடைய பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இருக்கின்ற வியாழேந்திரனுக்கு எதிராக அவர் சார்ந்திருக்கின்ற கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அந்தக் கட்சியை மேற்கோள்காட்டி செய்தி கிடைக்கப்பெற்றிருக்கிறது. தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண சூழ்நிலையை தமது இனத்திற்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சிக்கு தெரியாமல் அனுமதியில்லாமல் பிரதி அமைச்சர் பொறுப்பினை ஏற்று இருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புளொட்அமைப்பினை மேற்கோள்காட்டி செய்தி கிடைக்கப் ...

Read More »